/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு முன்பதிவு
/
முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு முன்பதிவு
ADDED : ஆக 25, 2024 01:27 AM
தர்மபுரி, ஆக. 25-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பாண்டு, 2024 - 25 ல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் வரும் செப்., மற்றும் அக்., மாதத்தில் நடத்தப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் இருந்து, 12 முதல், 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 முதல், 25 வயது வரை கல்லுாரி மாணவர்களுக்கும், 15 முதல், 35 வரை பொதுப்பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க, முன்பதிவு செய்ய வரும் ஆக., 25 கடைசி. இது குறித்து, 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மற்றும், 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.