/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாழ்வாக செல்லும் மின் கம்பி மாற்றி அமைக்கப்படுமா?
/
தாழ்வாக செல்லும் மின் கம்பி மாற்றி அமைக்கப்படுமா?
ADDED : ஆக 17, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, களர்பதி, அரசு உயர்நிலைப் பள்ளி அருகில், தமிழ்நாடு அரசு ஏழாம் அணி சிறப்பு போலீஸ் அலுவலகம் உள்ளது.
இதன் எதிரில் இருந்து குண்டுப்பட்டி செல்லும் வழியில், கைக்கெட்டும் உயரத்தில் மின் கம்பி செல்கிறது. இந்த வழியாக விவசாயிகள், விளை பொருட்களை டிராக்டர், டாட்டா ஏசி வாகனத்தில் எடுத்துச் சென்று வருகின்றனர். சாலையின் குறுக்கே எட்டும் தூரத்தில் உள்ள மின் கம்பியால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

