ADDED : செப் 08, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரக விளையாட்டு போட்டிகள்
மொரப்பூர், செப். 8-
அரூர் சரக அளவிலான குழு மற்றும் தடகள போட்டிகள், ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2 நாட்கள் நடந்தது. இதில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், பள்ளி தலைமையாசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.