/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலி ஆவணம் மூலம் பணம் கையாடல் கூட்டுறவு வங்கி அலுவலர் 'சஸ்பெண்ட்'
/
போலி ஆவணம் மூலம் பணம் கையாடல் கூட்டுறவு வங்கி அலுவலர் 'சஸ்பெண்ட்'
போலி ஆவணம் மூலம் பணம் கையாடல் கூட்டுறவு வங்கி அலுவலர் 'சஸ்பெண்ட்'
போலி ஆவணம் மூலம் பணம் கையாடல் கூட்டுறவு வங்கி அலுவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 02, 2024 01:37 AM
தர்மபுரி, தர்மபுரி பை-பாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 60; இவர், தர்மபுரி கூட்டுறவு நகர வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், வங்கியில் பொதுமக்கள் டிபாசிட் செய்த தொகையில், போலி வவுச்சர்களை வைத்து,
3.50 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். இதேபோல், தன் உறவினர்கள் பெயரில் போலி ஆவணங்களை வைத்து, 24 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக, தர்மபுரி சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன் உத்தரவின் படி, கூட்டுறவுத்துறை அதிகாரி கவுரி விசாரணையில், கோவிந்தசாமி போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல் செய்தது தெரிந்தது. அதன்படி அவரை, தர்மபுரி கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பிரேம், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.