/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.,வினர் வாக்குவாதம்
/
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.,வினர் வாக்குவாதம்
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.,வினர் வாக்குவாதம்
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.,வினர் வாக்குவாதம்
ADDED : செப் 08, 2024 12:58 AM
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில்
தி.மு.க.,வினர் வாக்குவாதம்
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 8-
பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய, தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், வெங்கடசமுத்திரத்திலுள்ள விநாயகா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் வேலு தலைமை வகித்தார். ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணன் என்பவர் பேசும்போது, ஒன்றிய செயலாளர்கள், தொண்டர்களை மதிப்பதில்லை, கட்சியினருக்கு எதுவும் செய்வதில்லை என, புகார் தெரிவித்த போது, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கிருஷ்ணன் தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், 'எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். உங்களுடைய குறைகளை சொல்லுங்கள், பேசிக் கொள்ளலாம். அதற்காக தான் இந்த கூட்டம். யாரும் மற்றவர் மீது குறை சொல்வதோ, கோபப்படுவதோ வேண்டாம்' எனக்கூறி சமாதானப்படுத்தினார். தொடர்ந்து, உள்ளாட்சி, கூட்டுறவு மற்றும் சட்டசபை தேர்தல், கட்சிப்பணிகள் குறித்து பழனியப்பன் பேசினார்.
கூட்டத்தில், தர்மபுரி எம்.பி., மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.