/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முகாமில் மக்களுக்கு அரசு திட்டங்கள் விளக்கம்
/
முகாமில் மக்களுக்கு அரசு திட்டங்கள் விளக்கம்
ADDED : ஆக 14, 2024 02:11 AM
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சமுதாய கூடத்தில், 'மக்க-ளுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. பி.டி.ஓ., ஜெகதீசன் தலைமை வகித்தார்.
முகாமில், அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள், முதல்-வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், சமுகநலத்துறை மூலம் வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்கினர்.
மேலும், வேளாண் துறை மூலம் மானிய விலையில் விவசாயிக-ளுக்கு இடுபொருட்கள் வழங்குதல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இ-சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் என்பன உட்பட, தமிழக அரசு செயல்-படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்-கமளித்தனர். பல்வேறு துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.முகாமில், பஞ்சப்பள்ளி, கும்மனுார், சூடனுார், அத்திமுட்லு, கெண்டேனஹள்ளி ஆகிய பஞ்.,களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி, பஞ்., தலைவர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், பையர்நத்தம், போதக்காடு, மெணசி ஆகிய, மூன்று ஊராட்சிகளுக்கும், பையர்-நத்தம் சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ.,க்கள் ரவிச்-சந்திரன், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தா குப்பு-சாமி, பூங்கொடி மாணிக்கம், ரீனாஅன்பரசு ஆகியோர் பொதுமக்-களிடம் மனுக்களை பெற்றனர்.

