/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இன்று தர்மபுரி மாவட்டத்தில் 251 பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
/
இன்று தர்மபுரி மாவட்டத்தில் 251 பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
இன்று தர்மபுரி மாவட்டத்தில் 251 பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
இன்று தர்மபுரி மாவட்டத்தில் 251 பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 15, 2024 01:23 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக்கூட்டம் அனைத்து பஞ்.,களிலும் நடக்கவுள்ளதாக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 கிராம பஞ்.,களில் சுதந்திர தினத்தில் கிராம சபைக்கூட்டம் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
ஒவ்வொரு பஞ்.,க்கும் ஒரு பற்றாளர், கண்காணிக்க, ஒவ்வொரு ஒன்றியத்திலும் உதவி இயக்குனர் நிலை மற்றும் இணை இயக்குனர் நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விபரம், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது, இணையவழியில் வரி செலுத்தும் சேவை, மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், மேலும், தமிழ்நாடு எளிமை படுத்தப்பட்ட பஞ்., கணக்கு குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து, விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து பஞ்., உறுப்பினர்கள் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.