/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு 5,611 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு 5,611 பேர் 'ஆப்சென்ட்'
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு 5,611 பேர் 'ஆப்சென்ட்'
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு 5,611 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 15, 2024 01:05 AM
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு
5,611 பேர் 'ஆப்சென்ட்'
தர்மபுரி, செப். 15-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- குரூப், 2 மற்றும் குரூப், 2 ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில், 74 இடங்களில் அமைக்கப்பட்ட, 101 தேர்வு மையங்களில், 27,496 தேர்வெழுத அனுமதி சீட்டு வழங்கபட்டது. தேர்வை நடத்த மூன்று கண்காணிப்பு அலுவலர்கள், 101 ஆய்வு அலுவலர்கள், 104 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தேர்வை கண்காணிக்க நான்கு பறக்கும் படை, 24 நடமாடும் குழுக்கள், 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தபட்டனர். நேற்று, 21,885 பேர் தேர்வெழுதிய நிலையில், 5,611 பேர் ஆப்சென்ட் ஆகினர். அதியமான்கோட்டை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.