/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம் தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்
/
கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம் தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்
கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம் தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்
கிடப்பில் கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம் தென்பெண்ணையில் வீணாக செல்லும் தண்ணீர்
ADDED : ஆக 15, 2024 01:20 AM
அரூர், கிடப்பில் போடப்பட்ட, கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தால், தென்பெண்ணை ஆற்றில், தண்ணீர் வீணாக செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட, 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி
பெறுகிறது.
மழைக்காலங்களில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை,
கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்துார், சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டு
களாக வலியுறுத்தி வருகின்றனர்.
கிடப்பில் திட்டம்
மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய, 10 லட்சம் ரூபாயை, அப்போதைய, அ.தி.மு.க., அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்திற்கு கடந்த, 2020 பட்ஜெட்டில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பின், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது-. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதனால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலையில் மட்டுமே, தர்மபுரி மாவட்ட மக்கள்
உள்ளனர்.