/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவிலில் பூஜை
/
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவிலில் பூஜை
ADDED : ஆக 10, 2024 07:01 AM
தர்மபுரி: ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்ம-புரி பாரதிபுரம் சாலை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு நேற்று பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்-ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இப்பகு-தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், கடகத்துார் பட்டாளம்மன், கொளகத்துார் பச்சை-யம்மன், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன், நெசவாளர்காலனி செளடேஸ்வரி அம்மன், அதி-யமான்கோட்டை மேல் காளியம்மன் கோவில் உள்பட, மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* கடத்துார் அடுத்த நல்ல குட்லஹள்ளி, நடூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்-பட்டியில் உள்ள காணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பொ.மல்லாபுரம் அடுத்த பழைய ஒட்டுப்பட்டியில் உள்ள மாரி-யம்மன் கோவில் அம்மாபாளையம், கதிரிபுரம், பையர்-நத்தம்,தாளநத்தம், மணியம்பாடி, மஞ்சவாடி உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பூஜைகள் நடந்தன.

