ADDED : ஆக 07, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்,
மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், கம்பைநல்லுார் எஸ்.ஐ., முருகன் உள்ளிட்ட குழுவினர் கம்பைநல்லுார் டவுன் பஞ்., அலுவலகம் எதிரில் உள்ள மளிகை கடையில், நேற்று திடீர் ஆய்வு
மேற்கொண்டனர்,
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கடை உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 2 பேக்கரிகள் மற்றும் ஒரு பாஸ்ட் புட் கடைக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.