ADDED : ஜூலை 14, 2011 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: மாரண்டஹள்ளி நகர தி.மு.க., சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பாலக்கோடு யூனியன் சேர்மன் வக்கீல் முருகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, ராஜபார்ட், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஜீவா சுந்தரசேன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன், எம்.பி., தாமரைசெல்வன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் பேசினர்.

