ADDED : ஜன 13, 2024 04:09 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, எஸ்.பி., ஸ்டீபன்ஜேசுபாதம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது: காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
அமைதி பேணுதல், குற்றங்களை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு மாணவர்கள் உதவி செய்ய வேண்டும். இந்த தேசிய மாணவர் படையில், அவர்களுக்கு குற்றத்தை தடுத்தல், சமூக காவல், சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படும். இதை மாணவர்கள் முறையாக கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தலைமையாசிரியர் தங்கவேல், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி., செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.