ADDED : மார் 10, 2024 03:48 AM
பாப்பிரெட்டிப்பட்டி: அரூர் நான்குரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன், நேற்று முன்தினம் காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரூர் வட்டார தலைவர் வஜ்ஜிரம் தலைமை வகித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விபரத்தை, தர மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் கணேசன், வைரவன், சிவலிங்கம், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* பா.ஜ., தேர்தல் பத்திர முறைகேட்டை மறைக்க முயற்சிக்கும், எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகத்தை கண்டித்து, கடத்துார் எஸ்.பி.ஐ., வங்கி முன் காங்.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் குமரவேல் பேசினார். நிர்வாகிகள் முருகன், முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

