நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருத்தரங்கு
தர்மபுரி, : தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா, மாவட்ட போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பெரியார் பல்கலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, தேசிய சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி  நடத்தினர்.
100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்
புணர்வு கருத்தரங்கு பெரியார் பல்கலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது.  ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல்காதர் வரவேற்றார்.
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், டிராபிக் எஸ்.ஐ., ரகுநாதன் உட்பட பலர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினர்.

