ADDED : மே 06, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: மலை சுழற்சி மாறுதல் முறையை ரத்து செய்யக்கோரி, தொடக்க கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டடைப்பு சார்பில், சத்தியமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சரத் அருள் மாறன் தலைமை வகித்தார்.
மாநில முன்னுரிமை பின்பற்றப்படும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் போன்று தொடக்க கல்வித்துறையிலும் வட்டார அளவிலான, 21 மலை சுழற்சி வட்டாரங்களுக்கு மாறுதலை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.