ADDED : ஜூலை 15, 2025 01:34 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், பணிபுரிந்து வரும் தாசில்தார்களை இடமாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:பென்னாகரம் தாசில்தாராக பணியாற்றிய பிரசன்னமூர்த்தி, நல்லம்பள்ளி தாசில்தாராகவும், நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார், மொரப்பூர் தர்மபுரி ரயில்வே அலகு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கலைச்செல்வி, மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றிய கனிமொழி அரூர் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரூர் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கண்ணன், தர்மபுரி ஆயம் அலுவலக மேலாளராகவும், அங்கு பணியாற்றிய கேசவமூர்த்தி, தர்மபுரி அலுவலக மேலாளர் (பொது)ஆகவும், அங்கு பணியாற்றிய அருண்பிரசாத், தர்மபுரி கோட்டை ஆய அலுவலராகவும், அங்கு பணியாற்றிய செல்வகுமார் பாப்பிரெட்டிபட்டி தனி தாசில்தாராகவும் (ச.பா.தி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி தனி தாசில்தார் ராதாகிருஷ்ணன், தர்மபுரி நீதியல் அலுவலக மேலாளராகவும், அங்கு பணியாற்றிய அசோக்குமார் பாலக்கோடு தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ரஜினி, தர்மபுரி தனி தாசில்தார் (கு.பொ.வ) ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கருணாநிதி, தர்மபுரி தனி தாசில்தார் (முத்திரைத்தாள்) ஆகவும், அங்கு பணியாற்றிய சவுகத் அலி தர்மபுரி தாசில்தாராகவும், தர்மபுரி தாசில்தார் சண்முகசுந்தரம் பென்னாகரம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.