ADDED : ஆக 26, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம், மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் துளசிநாதன், கதிரவன், கனிமொழி, மனிஷா, ஆர்த்தி, பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், ஆகாஷ், கோகுல், சிவரஞ்சனி, மற்றும் பென்னாகரம் அரசு மகளிர் பள்ளியை சேர்ந்த ரீனா உள்ளிட்ட, 10 பேர், அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க உள்ளனர்.
அவர்களுக்கு பென்னாகரம் பொன்னம்மாள் நஞ்சைய்யா அறக்கட்டளை சார்பில் தலா, 20,000 என மொத்தம், 2 லட்ச ரூபாயை ஊக்கத்தொகையை வழங்கப்பட்டது.

