/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2025 01:18 AM
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 2003 ஏப்., 1க்கு பிறகு, பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி தலைமையாசிரியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் இழைக்கப்படும் அநீதியை களைய வேண்டும். 2023 டிச., 21 அரசாணை எண். 243ஐ உடனே ரத்து செய்ய வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய
வேண்டும். அரசுத்துறை மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.