/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி வகுப்பறையில் தேனீக்கள் கொட்டி 'குரூப் - 4' தேர்வெழுத வந்த 15 பேர் காயம்

ADDED : ஜூன் 10, 2024 01:38 AM
அரூர்: அரூர் அருகே, தேனீக்கள் கொட்டியதில், 'குரூப் - 4' தேர்வு எழுத வந்த, 15 பேர் காயமடைந்தனர்.
கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர் உள்ளிட்ட, 6,244 காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 9:45 மணிக்கு, அறை எண்-5ல் பின்புறமிருந்த தேன்கூடு கலைந்தது. ஆக்ரோஷமாக பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் வகுப்பறைக்குள் புகுந்தது. தொடர்ந்து தேனீக்கள் கொட்டியதில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அறை கண்காணிப்பாளர் ஜெயவேல் மற்றும் தேர்வு எழுத வந்திருந்த, 15 பேர் காயமடைந்தனர்.
தகவலின் படி, சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் தலைமையிலான மருத்துவ குழுவினர், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின், காயமடைந்தவர்கள் மாற்று அறையில் தேர்வு எழுதினர். மேலும், அரூர் தாசில்தார் ராதா
கிருஷ்ணன் நேரில் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.