/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 குடும்பத்தினரால் பரபரப்பு

ADDED : செப் 03, 2024 05:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது-மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு, பொதுமக்களிடம், 393 கோரிக்கை மனுக்களை பெற்றார். மனு அளிக்க வந்தவர்கள் பலர், கூட்டமாக வந்ததால் அவர்களை கட்-டுப்படுத்துவதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. அப்-போது அங்கு, போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல்கதிரம்பட்டியை சேர்ந்த பிரகாஷ், 53, வந்தார். அவர், தன் வீட்டின் முன் காய்ந்த நிலையிலுள்ள புளியமரத்தை அகற்றக்கோரி, பல இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதே-போல, நிலப்பிரச்னைக்கு மனு அளித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, போச்சம்பள்ளி அடுத்த வேடர் தட்டக்-கல்லை சேர்ந்த பவுன்ராஜ்,45, தன் பெற்றோர், குழந்தைக-ளுடன் வந்து, தங்கள் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்-குளிக்க முயன்றார். அவர்களை, அங்கிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தி, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.