/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்
/
நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்
நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்
நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்
ADDED : செப் 01, 2024 05:03 AM
அரூர்: ஊத்தங்கரையிலிருந்து தவிடு ஏற்றிய டாரஸ் லாரி நேற்று முன்-தினம் இரவு, 9:30 மணிக்கு நாமக்கல் நோக்கி சென்றது.
படப்-பள்ளியை சேர்ந்த ராஜா, 46, என்பவர் ஓட்டினார். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையோர வளைவில் டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்த லாரி, சாலையில் நின்றிருந்த டாடா ஏஸ் மற்றும், 3 பைக்குகள் மீது மோதி கவிழ்ந்தது. இதில், வாக-னங்கள் சேதமடைந்ததுடன், அங்கிருந்த நகைக்கடை வாட்ச்மேன் பாட்சாபேட்டையை சேர்ந்த ராஜா, 60, இறைச்சி கடை ஊழியர் சர்தார், 39, டிரைவர் ராஜா உள்ளிட்ட, 3 பேர் படு-காயமடைந்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர். இதே இடத்தில் கடந்தாண்டு ஏப்., 13ல் ஏற்பட்ட விபத்தில், 2 வாலி-பர்கள் உயிரிழந்தனர். சில மாதங்களுக்கு முன் லாரி மோதியதில், பெண் ஒருவர் இறந்தார். அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்-பட்டு வருவதால், நேற்று அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், டி.எஸ்.பி., ஜெகன்-நாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்-திகேயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.