/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தடை செய்த பிளாஸ்டிக் 300 கிலோ பறிமுதல்
/
தடை செய்த பிளாஸ்டிக் 300 கிலோ பறிமுதல்
ADDED : மே 26, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது.
நேற்று பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி மெயின் ரோடு, சேலம் ரோடு, ஆர்.எம்.நகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து தலைமையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பேரூராட்சி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட, 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.