/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து700 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து700 கன அடியாக சரிவு
ADDED : ஏப் 06, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்லில் நீர்வரத்து700 கன அடியாக சரிவு
ஒகேனக்கல்:தமிழக, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சியால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு கடுமையாக சரிந்து கொண்டே வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆங்காங்கே நீரின்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,000 கன அடியாக இருந்த நீர்
வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 700 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளில் பாறைகளாக காட்சி
யளிக்கிறது. மெயின் அருவி யில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது.