/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலம் கட்ட மண் தோண்டிய குழியால் சிறுவன் பலி
/
பாலம் கட்ட மண் தோண்டிய குழியால் சிறுவன் பலி
ADDED : ஆக 05, 2024 02:20 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டியை சேர்ந்த தம்பதி தங்கவேலு - சந்தியா. பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகன் சபரிதரன், ௯; ஒட்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தான். பாட்டி வீட்டில் தங்கியுள்ள சிறுவன், நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால், நண்பர்கள் இருவருடன் ஒட்டம்பட்டி தென்பெண்ணை ஆற்றுக்கு சென்றுள்ளான்.
அந்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த சில நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்காக அந்த இடத்தில் தோண்டப்பட்டிருந்த பெரிய அளவிலான குழியில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் மீன் பிடித்த சபரிதரன், எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து விட்டான். மற்ற இரு சிறுவர்கள் தகவலின்படி சென்ற ஊத்தங்கரை போலீசார், சபரிதரன் சடலத்தை மீட்டனர்.