/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பத்தில் கார் மோதியது போக்குவரத்து பாதிப்பு
/
கம்பத்தில் கார் மோதியது போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 09, 2024 02:48 AM
சென்னிமலை: சென்னிமலை, காங்கயேம் சாலையில் வசிப்பவர் தெய்வசிகா-மணி, 70. இவர் தனது சேன்டோரோ காரில் காங்கேயம் சென்று விட்டு நேற்று மதியம், 12:30 மணிக்கு காங்கேயம் மெயின் ரோடு கணுவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது கார்
மோதியது.
இதனால் உயர் அழுத்த மின் கம்பிகள் சாலையின் குறுக்கே விழுந்தன. காரில் பயணம் செய்த தெய்வசிகாமணிக்கு பாதிப்பு எதுவும் இல்லை. காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, இரண்டு மணி நேரத்தில் மின் கம்பிகளை சீரமைத்து மின் தடையை சரி செய்தனர்.