/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
/
முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
ADDED : ஜூலை 17, 2024 02:41 AM
தர்மபுரி;பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையத்தின், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த, பயிற்சிகளை வழங்க ஏதுவாக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த, 2022- - 2023 ல் தொடங்கப்பட்டது. தற்போது, 2024 --2025 கல்வி ஆண்டில், தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடியிருப்புகளில் முற்றிலும் எழுத, படிக்க தெரியாத, 2,100 பேர் கண்டறியப்பட்டு, 101 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையம் மூலம், ஜூலை, 15 முதல் நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரம் என, நவ., மாதம் வரை, 200 மணி நேர பயிற்சி தன்னார்வலர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது. தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டி தொடக்கப்பள்ளியில் நடந்த துவக்க விழாவில், தர்மபுரி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். வார்டு உறுப்பினர் இளங்கோ முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கற்போர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.