/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., தகவல்

ADDED : ஆக 17, 2024 04:03 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார்.
இதில், திருமலை, முருகன், ராஜகுமார், வெங்கடேசன், செல்வராஜ், ராஜமாணிக்கம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், 'மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நெல்லுக்கான கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில், அரூரில் நடப்பாண்டில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். அரூர்-சேலம் பிரதான சாலையில் இருந்து, டி.புதுாருக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும். ஒடசல்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டியில் இருந்து கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்க வேண்டும்.
'கணபதிப்பட்டியில் மயானத்திற்கு இடம் இருந்த போதிலும், பட்டா நிலத்தில் உடல் அடக்கம் செய்வதை தடுக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பீணியாற்றை விவசாயிகள் முன்னிலையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். கீழானுார் வாணியாற்றில் பயன்பாடின்றி உள்ள குடிநீர் குழாய்களை கொண்டு அருகில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும்' என்றனர்.
இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், ''விவசாயிகளின் புகார் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நடப்பாண்டில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்தார்.