/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 02:15 AM
தர்மபுரி;மின்கட்டணத்தை உயர்த்திய, தி.மு.க., அரசை கண்டித்து, தர்மபுரியில், மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் தமிழகத்தில், 3வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள, தி.மு.க., அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மின்கட்டணத்தை உயர்த்திய நிலையிலும், அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள், தொழில் செய்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் என கோஷமிட்டனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை, பயனாளிகளுக்கு வழங்குவதை நிறுத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத், நகர செயலாளர் ரவி, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.