/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
/
தர்மபுரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 31, 2024 12:53 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாவட்ட அளவிலான எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கண்டறிதல் முகாமை, மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, தர்மபுரியில் கல்லுாரி
மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தி நேற்று துவக்கி வைத்தார்.
இதில், கிராமியக் கலைக்குழு மூலம் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. எட்டு முதல், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, எச்.ஐ.வி., விழிப்புணர்வு குறித்து போட்டிகள்
நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்று முதல், மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, கிராமிய கலைஞர்களை வைத்து, பால்வினை நோய் குறித்து, கரகாட்டம்,
ஒயிலாட்டம், தப்பாட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள, 40 கிராமங்களில் இந்த பிரச்சாரம் செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஒ.,
பால்பிரின்ஜிராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனை ஆர்.எம்.ஒ., சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.