/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயிற்சி முடித்த 9 எஸ்.ஐ.,க்கு பணி நியமன ஆணை
/
பயிற்சி முடித்த 9 எஸ்.ஐ.,க்கு பணி நியமன ஆணை
ADDED : செப் 03, 2024 05:23 AM
தர்மபுரி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்-பட்ட, 2022 ம் ஆண்டிற்கான, எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 427 பேர் ஒரு வருடம் சென்னையிலுள்ள, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லுாரியில் அடிப்படை பயிற்சி முடித்தனர்.
அதன் பிறகு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன்-களில், 6 மாதம் செய்முறை பயிற்சி முடித்தனர். இதில், பயிற்சி முடித்து, தர்மபுரி மாவட்டத்தில் பணியில் ஆணை பெறவுள்ள எஸ்.ஐ.,க்கள், நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, பணி நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, ஆனந்தகுமார், பச்சமுத்து, சக்திவேல், உதயகுமார், நவீன், பரமேஸ்வரன், பிரவீன்குமார், சரசு, சந்தியா உட்பட, 9 எஸ்.ஐ.,களுக்கு எஸ்.பி., வழங்கினார்.