/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டலில் வாக்குவாதம் எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
ஓட்டலில் வாக்குவாதம் எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 05, 2024 03:04 AM
தர்மபுரி: சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஓட்டல் உரிமையாளரின் மகனை, ஷூவால் அடிக்க முயன்ற, எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தர்மபுரி அரசு மருத்துக் கல்லுாரி மருத்துவமனையிலுள்ள புறக்காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., காவேரி. இவர், மருத்துவமனை எதிரிலுள்ள ஓட்டலில் சாப்பிடுவது வழக்கம். சில நாட்கள் பணம் குறைவாக இருந்தால், அடுத்த நாள் அதை கொடுத்து வந்துள்ளார். கடந்த மாதம், 28 ம் தேதியன்று அந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, கல்லாவிலிருந்த கடை உரிமையாளரின் மகன் முத்தமிழ் என்பவரிடம், பணத்தை கொடுத்தபோது, அவர் பழைய பாக்கியை கேட்டுள்ளார்.இது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, எஸ்.எஸ்.ஐ., காவேரி, தான் சாப்பிட்ட உணவுக்கான பணத்தை, மேஜையில் வீசினார். தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எஸ்.எஸ்.ஐ., காவேரி, தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி, முத்தமிழை அடிக்க முயன்றபோது, ஓட்டல் ஊழியர்கள் அவரை தடுத்து, சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவம் கடையிலுள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ வைரலானது.
தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வந்த நிலையில். மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், எஸ்.எஸ்.ஐ., காவேரியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.