/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதிக போதைக்கு ஊமத்தை விதையை அரைத்து மதுவில் கலந்தவர் கைது
/
அதிக போதைக்கு ஊமத்தை விதையை அரைத்து மதுவில் கலந்தவர் கைது
அதிக போதைக்கு ஊமத்தை விதையை அரைத்து மதுவில் கலந்தவர் கைது
அதிக போதைக்கு ஊமத்தை விதையை அரைத்து மதுவில் கலந்தவர் கைது
ADDED : ஜூன் 14, 2024 01:28 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி எஸ்.ஐ., வடிவேல் மற்றும் போலீசார், கோட்டமேடு பெரிய ஏரி அருகே ரோந்து சென்றார். அங்கு விற்பனைக்காக, சாக்குப்பையில், 13 மது பாட்டில்களை கொண்டு வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் சாலுாரை சேர்ந்த சந்திரன், 45, என தெரியவந்தது.
மேலும் அவர், அதிக போதை ஏற, ஊமத்தை விதையை அரைத்து மதுவில் கலந்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று, மாரியம்பட்டியை சேர்ந்த சத்தியசுந்தரம், 44, என்பவர் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க வாங்கி வந்துள்ளார். அவரை கைது செய்து அவரிமிருந்து, 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.