/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் இ.ஆர்.கே., பள்ளி மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தல்
/
அரூர் இ.ஆர்.கே., பள்ளி மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தல்
அரூர் இ.ஆர்.கே., பள்ளி மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தல்
அரூர் இ.ஆர்.கே., பள்ளி மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தல்
ADDED : மே 11, 2024 11:32 AM
அரூர்: அரூர் அருகே எருமியாம்பட்டி, இ.ஆர்.கே., மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே எருமியாம்பட்டியில் உள்ள இ.ஆர்.கே., மேல்நிலைப்பள்ளி மாணவி ராகவி, 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றார். அவரது பாடவாரியான மதிப்பெண் தமிழ் -98 ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூகஅறிவியல் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
மாணவி சுபிக் ஷா, 497 மதிப்பெண், கவிப்பிரியா 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம், மூன்றாம் இடமும் பிடித்தனர். 495க்கு மேல் 4 மாணவர்கள், 480 க்கு மேல் 8 மாணவர்கள், 450க்கு மேல் 35 மாணவர்கள், 400க்கு மேல் 62 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம் பாடப்பிரியில், 16 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 9 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 12 மாணவர்கள், ஆங்கிலத்தில் 1 மாணவர், 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் தீர்த்துமாலை, பொறுப்பாசிரியர் பார்த்திபன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். இப்பள்ளியில், 11ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி பாடப்பிரிவுகள், நீட்பயிற்சி வகுப்பு, பாராமெடிக்கல், பார்மசி, நர்சிங், இ.ஆர்.கே., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.