/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
/
அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 18, 2024 12:58 AM
தர்மபுரி: பத்து மற்றும் பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி தர்மபுரி, அதியமான்கோட்டை, செந்தில் பப்ளிக் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய, 273 மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மாணவன் வசந்த், 493 மதிப்பெண்களை பெற்று மாவட்டத்தில் முதலிடமும், செந்தில் குமார் மற்றும் துதிவந்த் ஆகியோர் தலா, -492 மதிப்பெண்களை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், ரிஷிகா, மோகன பிரசாத் மற்றும் தீபிகா -ஆகியோர் தலா, 491 மதிப்பெண்களை பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வெழுதிய, 180 மாணவர்களும் தேர்ச்சி அடைந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மாணவன் குகன் சங்கர், 487 மதிப்பெண்களை பெற்று தர்மபுரி மாவட்டத்தில் முதலிடத்தையும், விஷால், விஜய் ஈஸ்வரன், ஸ்ரேயா மற்றும் அசோகன் தலா,- 480 மதிப்பெண்களை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், சஞ்சய், புவனேஸ்வரன், தேஜேஸ்வர் தலா, 478 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை பெற்று, சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில் முருகன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஞானகவிதா, தீபா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்று, மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

