/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
/
தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
ADDED : மே 27, 2024 07:00 AM
ஓசூர் : சூளகிரியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையோரம், தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, சூளகிரியை சேர்ந்த நபர் ஒருவர், 4,000 ரூபாய்க்கு தன் காருக்கு டீசல் போட்டார். அப்பணத்தை கொடுக்காமல் காரில் செல்ல முயன்றார். இதை கவனித்த பெட்ரோல் பங்க் ஊழியர், காரை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர். இதனால் ஊழியருக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், பெட்ரோல் பங்க் ஊழியரை அந்த நபர் தாக்கினார். சூளகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இக்காட்சிகள் பெட்ரோல் பங்க்கில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூளகிரி போலீசார் விசாரணையில், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் பெயர் திம்மராஜ் என தெரியவந்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

