/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி எம்.எல்.ஏ., ஆபீசில் திருட முயற்சி
/
தர்மபுரி எம்.எல்.ஏ., ஆபீசில் திருட முயற்சி
ADDED : மே 22, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி :தர்மபுரி தாலுகா அலுவலகம் அருகே, தர்மபுரி, எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இதை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பயன்படுத்தி வந்தார். தேர்தல் விதிமுறைகளால், எம்.எல்.ஏ., அலுவலகம் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதை கவனித்த மர்மநபர்கள் நேற்று அலுவலக முன்புற கேட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். இது குறித்து, வி.ஏ.ஓ., கலையரசன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

