/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டு எண்ணிக்கை பணி பார்வையாளர்கள் வருகை
/
ஓட்டு எண்ணிக்கை பணி பார்வையாளர்கள் வருகை
ADDED : ஜூன் 04, 2024 04:52 AM
தர்மபுரி: லோக்சபா பொதுத்தேர்தல்-, ஓட்டு எண்ணும் பணிகளை பார்வையிட, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர்கள், தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தனர்.
தர்மபுரி லோக்சபா தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர்களாக, -பாலக்கோடு, பென்னாகரம்,- தர்மபுரி, ஆகிய, 3 சட்டசபை தொகுதிகளுக்கு அருணா ரஜோரியா மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, -அரூர்(தனி), -மேட்டூர் ஆகிய, 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஸ்ரீஹர்ஷா எஸ் செட்டி மத்திய பார்வையாளர்களாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர்கள் தர்மபுரிக்கு வந்துள்ளனர்.
மேலும், தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு எண்ணும் பணிகள் தொடர்பாக, ஓட்டு எண்ணும் பார்வையாளர் அருணா ரஜோரியா, 93639 62216 என்ற மொபைல் எண் அல்லது generalobs2024.dpi@gmail.com மின்னஞ்ஜல் மற்றும் ஸ்ரீஹர்ஷா எஸ் செட்டி, 93637 91501 என்ற மொபைல் எண் அல்லது generalobs2024.dpi@gmail.com மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.