ADDED : ஜூன் 27, 2024 04:12 AM
தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட இந்திய மருத்துவச் சங்கம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. தர்மபுரி, 4 ரோட்டில் நடந்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தலைமை வகித்தார். மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி முன்னிலை வகித்தார்.
இதில், போதைக்கு அடிமையாகாதே, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். மது அருந்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு. மது குடிக்கும் பழக்கம் உயிரை கொல்லும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பாதைகளை ஏந்தி, விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
தர்மபுரி மாவட்ட, இந்திய மருத்துவச் சங்க மாநில துணைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் இளங்கோ, செயலாளர் சண்முகபிரியா, மருத்துவர்கள் கோகுல்,
நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.