/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பணம் வாங்காமல் ஓட்டளிக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
/
பணம் வாங்காமல் ஓட்டளிக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
பணம் வாங்காமல் ஓட்டளிக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
பணம் வாங்காமல் ஓட்டளிக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
ADDED : ஏப் 05, 2024 04:52 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தேர்தலில், 100 சதவீதம் பணம் வாங்காமல் ஓட்டளிப்பதை வலியுறுத்தி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், கலைநிகழ்ச்சி மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் முகமதுநஷீர் தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், உதவி திட்ட அலுவலர் செங்கோட்டுவேல், மாவட்ட வள பயிற்றுனர் பெருமாள், வட்டார மேலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் சுய உதவி குழுவினர் கலைநிகழ்ச்சி மூலமும், கையில் ஓட்டளிப்பது போன்று மெகந்தி வரைந்தும், ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என கோலமிட்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி, சுந்தரபாண்டியன், வெற்றிசெல்வி, துர்காதேவி, பூந்தளிர், அஸ்வினி மற்றும் மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

