/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோட்டில் பா.ம.க., ஆலோசனை கூட்டம்
/
பாலக்கோட்டில் பா.ம.க., ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 27, 2024 02:34 AM
பாலக்கோடு: பாலக்கோட்டில் நேற்று, வரும், 2026 சட்டசபை தேர்தல் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து, பா.ம.க., மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் வரவேற்றார். பா.ம.க., மாநில கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பேசினார்.
இதில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் பாலக்கோடு சட்டசபை தொகுதியின் பொறுப்பாளர்கள் தலைவர், செயலாளர் மற்றும் மகளிர் அணி தலைவர், செயலாளர் ஆகியோரை நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் பூத்வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், 70க்கும் மேற்பட்ட தொண்டர்கள், தேர்தல் பொறுப்பாளராக பணியாற்ற விருப்ப மனு அளித்தனர். மனுவை பெற்ற கொண்ட மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன், அனைத்தும் மனுக்களும், தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.