/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து தொழிலாளி காயம்
/
பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து தொழிலாளி காயம்
ADDED : மே 28, 2024 08:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்தவர் ராஜ்குமார், 38, கூலித்தொழிலாளி; இவர், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த தன் ஹோண்டா பைக்கை நேற்று மாலை, 6:45 மணிக்கு எடுத்துள்ளார்.
தொடர்ந்து பைக்கை ஸ்டார்ட் செய்தபோது திடீரென பெட்ரோல் டேங்க் வெடித்துள்ளது. இதில், ராஜ்குமாரின் வயிறு மற்றும் இடதுகாலில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.