/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ம.க., ஓட்டு எண்ணிக்கை முகவர் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., ஓட்டு எண்ணிக்கை முகவர் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 27, 2024 07:02 AM
தர்மபுரி : தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூர் சட்டசபை தொகுதிகளின், பா.ம.க., ஓட்டு எண்ணிக்கை முகவர்களுடன் ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார்.
இதில், மேட்டூர், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், முன்னாள் லோக்சபா, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். பா.ம.க., கவுரவத்தலைவர் ஜி.கே.மணி ஜூன், 4ல் நடக்கவுள்ள லோக்சபா பொதுத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசினார். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மது விற்

