/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி லோக்சபா தேர்தலில் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

ADDED : ஏப் 04, 2024 04:42 AM
தர்மபுரி: தர்மபுரியில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், முன்னாள் ராணுவ வீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபட வேண்டும் என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் நம் தேசத்தை காக்க, ராணுவ படை வீரர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த தேர்தலில் உழைக்க முன்வர வேண்டும். மேலும், நடக்கவுள்ள இந்த தேர்தலில் தங்களது விருப்பத்தை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது விருப்ப மனுவை அளிக்கலாம். இந்த அலுவலகத்துக்கு நேரில் வர முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேசனை தொடர்பு கொண்டு விருப்ப விண்ணப்பத்தை அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04342 - 297844 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.