sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லோக்சபா தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

/

லோக்சபா தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

லோக்சபா தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

லோக்சபா தேர்தல் விதிமீறல் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஏப் 17, 2024 12:38 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார், அ.தி.மு.க., நகர செயலாளராக உள்ளவர் சந்தோஷ், 33; இவர், கடத்துார் புதிய பஸ் ஸ்டாண்டில், தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் போது, எவ்வித அனுமதி இன்றி, அ.தி.மு.க., கட்சியின் இரட்டை இலை சின்னம் கொண்ட, வால் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து உள்ளார் என, கடத்துார் வி.ஏ.ஓ., சுரேஷ் புகார் படி, கடத்துார் போலீசார்

விசாரிக்கின்றனர்.

13 பவுன் நகை திருட்டு


பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தாளநத்தம் பகுதியை சேர்ந்தவர் தீர்த்தமலை வயது 56; இவரை முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த சாரதி, 48; அவர் மனைவி சிவசக்தி, மகள்கள் சாருமதி, ஷாலினி, மகன் சரண் ஆகிய, 5 பேரும் கடந்த, 7 ல் தீர்த்தமலையின் வீடு சென்று அவரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்த, 52,000 ரூபாய், 13 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து தீர்த்தமலை கடந்த, 10 ல் தன்னை தாக்கி நகை, பணம் திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் படி, கடத்துார் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து

விசாரிக்கின்றனர்.

வி.சி., கட்சியினர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சாமியாபுரம் கூட்ரோட்டில், தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மணி, நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தி.மு.க., தரப்பில், 3,000 ரூபாய் வி.சி., ஒன்றிய செயலாளர் பழனியிடம் கொடுத்ததாக

கூறப்படுகிறது.

அதை பட்டுகோணாம்பட்டி வி.சி., நிர்வாகி மாது, மற்றும் பாலதண்டாயுதம் ஆகியோர் கேட்டபோது, அதே ஊரை சேர்ந்த முனுசாமி, இளங்கோ, கவுதமன், பசுபதி, சிவப்பெருமாள், சுபாஷ், வெங்கட்ராமன் ஆகியோர் சேர்ந்து மாது, பாலதண்டாயுதத்தை தாக்கி உள்ளனர். புகார் படி, 7 பேர் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதேபோன்று, முனுசாமி, வி.சி., ஒன்றிய செயலாளர் பழனியிடம் தகராறு செய்ததை கேட்டதற்கு, போதையில் இருந்த மாது, பாலதண்டாயுதம் ஆகிய இருவரும் சேர்ந்து, கத்தியால் குத்தியதில் உடலில் காயம் ஏற்பட்டது என கொடுத்த புகார் படி, மாது, பாலதண்டாயுதம் ஆகிய இருவர் மீதும் போலீசார் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மொத்தம், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வி.சி.,க்கள், 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us