/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணிகள் துவக்கம்
/
பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணிகள் துவக்கம்
பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணிகள் துவக்கம்
பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணிகள் துவக்கம்
ADDED : செப் 15, 2024 01:56 AM
பாலக்கோடு: பாலக்கோடு ரயில்வே ஸ்டே ஷனில், துாய்மை இந்தியா திட்-டத்தின் சார்பில் நடந்த துாய்மை பணிகளை, பேரூராட்சி தலைவர் முரளி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில், ஒவ்வொரு ஆண்டும் செப்., 14 முதல் அக்., 2 வரை, ஸ்வச்சபாரத் திட்-டத்தின் சார்பில், பேரூராட்சிக்குட்பட்ட பொது இடங்கள், வழி-பாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் துாய்மை பணிகள் செய்து, மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வாங்குவது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்வச்ச பாரத் திட்டத்தில், துாய்மை பணிகள் நடத்தப்பட்டது. பின், அங்கிருந்த மாரியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்-றுகள் நடும் பணியை பேரூராட்சி தலைவர் முரளி தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை துாய்மை-யாக வைத்து கொள்வேன் என பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பேருராட்சி துணைத் தலைவர் இதாயத்-துல்லா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்