/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
/
காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : பிப் 24, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மஜித் கோவில் தெருவை சேர்ந்தவர் ஷான்பாஷா. இவரது மகன் ரூகன் 17. இவர் பாலக்-கோட்டிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்று தன் நண்பர்கள், 5 பேருடன் ஒகேனக்கல் வந்தார். பல்-வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, நாடார் கொட்டாய் அருகே காவிரியாற்றில் குளித்துள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக ரூகன் தண்ணீரில் மூழ்கினார்.
ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடம் வந்து, தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியோடு நேற்று மாலை, 5:00 மணியளவில், மாணவர் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.