/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ADDED : மே 17, 2024 02:35 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடந்து முடிந்த, 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி கிரிஜா, 600க்கு, 597 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி, அக் ஷிதா, 588 மதிப்பெண் பெற்று, பள்ளியில், 2ம் இடமும், மாநில அளவில் சிறப்பிடமும் பெற்றுள்ளார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியரை, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர்கள் ஜான் இருதயராஜ், சாரதி மகாலிங்கம், வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.