sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அஞ்சல்துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி

/

அஞ்சல்துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி

அஞ்சல்துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி

அஞ்சல்துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி


ADDED : மார் 01, 2025 03:45 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

அஞ்சல்துறை சார்பில், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. 9 முதல், 15 வயதுக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, -மாணவியர் அந்தந்த பள்ளிகளில் பங்கேற்கலாம். 'நீங்கள் ஒரு கடல் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் ஏன், எப்படி உங்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்' என்பதை விளக்கி ஒருவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். கடிதம், 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம். இதில், தமிழக வட்ட அளவில் முதல் இடம் பெறுவோருக்கு, 25 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுவோர்க்கு, 10 ஆயிரம், மூன்றாமிடம் பெறுவோர்க்கு, 5,000 ரூபாய் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

அதேபோல், தேசிய அளவிலான போட்டியில், முதல் பரிசு பெறு-வோருக்கு முறையே, 50, 25, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்-கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்-பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும். பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் விண்ணப்பத்துடன் (பெயர், தந்தை, பள்ளி, முகவரி, வயது, பாலினம், மையம்), ஒரு போட்டோ, ஆதார் அட்டை நகல், பிறந்த தேதி அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், தபால் கண்காணிப்பாளர் தர்மபுரி கோட்டம், தர்மபுரி - 636 701 என்ற முகவரிக்கு மார்ச், 8 க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் www.indiapost gov.in தளத்திலோ அல்லது தர்மபுரி அஞ்சல் கோட்ட அலுவ-லகம், -04342- 269632 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us