/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஒருங்கிணைக்கும் முகாம்
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஒருங்கிணைக்கும் முகாம்
ADDED : ஏப் 13, 2024 07:44 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் படைவீரர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வரும், 17ல், முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தல் வரும், 19ல், நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை ஒருங்கிணைக்கும் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வரும், 17 காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது.
எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வரும் முன்னாள் படைவீரர்கள், வாக்காளர் அடையாள அட்டை, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, சீருடை, தொப்பி, காலணி, விசில் மற்றும் தேர்தல் முடியும் வரை தங்குவதற்கு தேவையான உடை, அனைத்து பொருட்களும் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

